ரூ.50 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்
திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்
திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
ரூ.50 லட்சம் மோசடி
திருப்பூர் முருகம்பாளையம் செல்லம் நகரை சேர்ந்த மணிகண்டன் என்பவர், மாநகர போலீஸ் கமிஷனர் வனிதாவிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது
திருப்பூர் கே.டி.சி. பள்ளி மெயின் வீதியை சேர்ந்த மோகன்தாஸ் வயது 54 மற்றும் அவரது மனைவி மணிமேகலை 52 ஆகியோர் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இவர்கள் என்னை அணுகி நாங்கள் ரூ.1 லட்சம், ரூ.80 ஆயிரம், ரூ.50 ஆயிரம் ஏலச்சீட்டு நடந்தி வருவதாகவும் ஏலச்சீட்டை அரசில் பதிவு செய்து இருப்பதாகவும் தெரிவித்தனர். கடந்த 2018ம் ஆண்டு ஏலச்சீட்டில் நான் சேர்ந்து வாரந்தோறும் ரூ.2 ஆயிரம் வீதம் என் பெயரிலும் எனது மனைவி பெயரிலும் என 2 சீட்டுக்கு பணம் செலுத்தினேன்.
தொடர்ந்து 2019ம் ஆண்டு ஏலச்சீட்டு முடிந்த பின்னர் பணத்தை கேட்டால் ஒரு மாதம் கழித்து தருவதாக தெரிவித்தனர். ஒரு மாதத்திற்கு பிறகு அவரது வீட்டிற்கு சென்ற போது வீடு பூட்டி கிடந்தது. அரசு அனுமதி பெறாமலும், கணவன்மனைவி இருவரும் ஏலச்சீட்டு நடத்தியும் என்னை போல் 70&க்கும் மேற்பட்டோரிடம் ரூ.50 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
தம்பதி கைது
இதைத்தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவின் பேரில், போலீஸ் துணை கமிஷனர்குற்றம் மற்றும் போக்குவரத்து ரவி உத்தரவின்படி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் பாலமுருகன் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியம்மாள் தலைமையில், சப்&இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் தலைமை காவலர் வசந்தகுமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசாரின் விசாரணையில் தம்பதி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த நிலையில் திருப்பூர் கண்டியம்மன்நகர் 2வது வீதியில் உள்ள வீட்டின் முன்பு நின்ற மோகன்தாஸ் மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு, திருப்பூர் தலைமை குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர். இதுபோன்று முறையாக பதிவு செய்யாத சீட்டு நிறுவனங்களில் பொதுமக்கள் யாரும் சீட்டு போட்டு ஏமாற வேண்டாம் என போலீஸ் கமிஷனர் வனிதா அறிவுறுத்தினார்.
&&&
Related Tags :
Next Story