வேலூர் மாவட்டத்தில் 16 ஊராட்சிமன்ற தலைவர் உள்பட 316 பேர் போட்டியின்றி தேர்வு


வேலூர் மாவட்டத்தில்  16 ஊராட்சிமன்ற தலைவர் உள்பட 316 பேர் போட்டியின்றி தேர்வு
x
தினத்தந்தி 26 Sept 2021 6:37 PM IST (Updated: 26 Sept 2021 6:37 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கு 6,547 பேர் போட்டியிடுகிறார்கள். 16 கிராம ஊராட்சி தலைவர் உள்பட 316 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கு 6,547 பேர் போட்டியிடுகிறார்கள். 16 கிராம ஊராட்சி தலைவர் உள்பட 316 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

316 பேர் போட்டியின்றி தேர்வு

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15&ந் தேதி தொடங்கி 22&ந் தேதி முடிவடைந்தது. வேலூர் மாவட்டத்தில் 14 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 93 பேரும், 138 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 741 பேரும், 247 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 1,192 பேரும், 2,079 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 6,144 பேர் என்று மொத்தம் 2,478 பதவிகளுக்கு 8, 170 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

வேட்புமனு பரிசீலனையில் 83 பேர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 1,224 பேர் வேட்புமனுவை திரும்ப பெற்றனர். 2 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 16 ஊராட்சிமன்ற தலைவர், 298 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என்று மொத்தம் 316 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2 கிராம ஊராட்சி தலைவர், 9 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

6, 547 வேட்பாளர்கள் களத்தில்...

14 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 93 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 6 பேரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 17 பேர் வேட்புமனுவை திரும்ப பெற்றனர். இறுதியாக 70 பேர் போட்டியிடுகின்றனர். 138 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 741 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதில், 12 பேரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 224 பேர் வேட்புமனுவை திரும்ப பெற்றனர். 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 503 பேர் களத்தில் உள்ளனர். 247 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 1,192 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில், 13 பேர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 343 பேர் வேட்புமனுவை திரும்ப பெற்றனர். 16 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக 820 பேர் போட்டியிடுகின்றனர்.

2,079 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 6,144 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதில், 52 பேர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 640 பேர் வேட்புமனுவை திரும்ப பெற்றனர். 298 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 5,154 பேர் களத்தில் உள்ளனர். 11 இடங்களுக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாதது, 316 பேர் போட்டியின்றி தேர்வு ஆகியவற்றை தவிர்த்து 2,151 உள்ளாட்சி பதவிகளுக்கு 6,547 பேர் போட்டியிடுகிறார்கள் என்று தேர்தல்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story