போடிமெட்டுவில் இருந்து போடிக்கு வரி கட்டாமல் கடத்திய 800 கிலோ ஏலக்காய் பறிமுதல் ரூ.1 லட்சம் அபராதம்


போடிமெட்டுவில் இருந்து போடிக்கு வரி கட்டாமல் கடத்திய 800 கிலோ ஏலக்காய் பறிமுதல் ரூ.1 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 26 Sept 2021 8:48 PM IST (Updated: 26 Sept 2021 8:48 PM IST)
t-max-icont-min-icon

போடிமெட்டுவில் இருந்து போடிக்கு வரி கட்டாமல் கடத்திய 800 கிலோ ஏலக்காய் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

போடி:
போடியைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது 27). ஏலக்காய் வியாபாரி. இவர் நேற்று போடிமெட்டுவில் இருந்து வேன் மற்றும் ஜீப்பில் 50 மூட்டைகளில் மொத்தம் 800 கிலோ ஏலக்காய்களை போடிக்கு கொண்டு வந்தார். வழியில் போடிமெட்டு சோதனை சாவடியில்  போடி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மகேஷ் போடிமெட்டுவில் இருந்து போடிக்கு, வரி கட்டாமல் ஏலக்காய்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஏலக்காய்கள் மற்றும் வாகனங்களை கைப்பற்றி போடி நகர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து வணிகவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் விரைந்து வந்து வரி கட்டாமல் ஏலக்காய்களை கடத்தி வந்ததற்காக மகேசுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர். மேலும் ஏலக்காய் பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story