784 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
விழுப்புரம் மாவட்டத்தில் 784 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதை மாவட்ட கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா 3&வது அலை பரவலை தடுக்க ஏற்கனவே 2 மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, நிர்ணயித்த இலக்கில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. நேற்று 3&வது மாபெரும் தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் நடந்தது.
இதற்காக கடலூர் மாவட்டத்தில் ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சி பகுதிகளில் உள்ள கிராம ஊராட்சி அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், பஸ் நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்கள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் 784 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
இதில் விழுப்புரம் சாலைஅகரம், வளவனூர், கண்டமங்கலம் ஆகிய பகுதியில் நடந்த முகாமில் கலெக்டர் மோகன் கலந்து கொண்டு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களின் விவரங்களை கண்டறிந்து, அவர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
முக கவசம்
மேலும் தடுப்பூசி போட்டவர்கள் அலட்சியமாக இருக்காமல், வெளியே செல்லும்போது முக கவசம் அணியவேண்டும். சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றார். அப்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் சங்கர் மற்றும் துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். இந்த சிறப்பு முகாமில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story