வேலூர் மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா


வேலூர் மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 26 Sept 2021 11:15 PM IST (Updated: 26 Sept 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 3&வது அலை பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது. 

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 24 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்றைய பரிசோதனையின் முடிவில் மேலும் 20 பேருக்கு பாதிப்பு உறுதியானது. அவர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 20 பேரின் குடும்பத்தினர், உறவினர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story