செம்மண் கடத்தியதாக 4 பேர் கைது
செம்மண் கடத்தியதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வெள்ளியணை,
தரகம்பட்டி அருகே உள்ள குளக்காரன்பட்டி பகுதியில் சிலர் செம்மண் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் பாலவிடுதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் சின்னாம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த மூர்த்தி (வயது 37), சுந்தர்ராஜ் (30), மாணிக்கம், குளக்காரன்பட்டியை சேர்ந்த தங்கவேல் (49) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ½ யூனிட் செம்மண்ணுடன் டிராக்டர் டிப்பரையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story