காரிமங்கலம் அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதி பெண் பலி மகள் படுகாயம்


காரிமங்கலம் அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதி பெண் பலி மகள் படுகாயம்
x
தினத்தந்தி 26 Sept 2021 11:46 PM IST (Updated: 26 Sept 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே ஸ்கூட்டர் மீது டேங்கர் லாரி மோதி பெண் பலியானார். அவருடைய மகள் படுகாயம் அடைந்தார்.

காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே ஸ்கூட்டர் மீது டேங்கர் லாரி மோதி பெண் பலியானார். அவருடைய மகள் படுகாயம் அடைந்தார்.
 ஸ்கூட்டர் மீது லாரி மோதியது
கிருஷ்ணகிரி மாவட்டம் சப்பானிப்பட்டி அருகே உள்ள கரகூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி பூங்கோதை (வயது 37). இவர்களது மகள் ஷர்மிளா (17). பூங்கோதையும், சர்மிளாவும் கரகூர் கிராமத்தில் இருந்து காரிமங்கலம் நோக்கி ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது காரிமங்கலம் அகரம் பைபாஸ் பிரிவு சாலை அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி அவர்கள் கீழே விழுந்தனர். 
அப்போது பின்னால் வந்த டேங்கர் லாரி அவர்கள் மீது ஏறியது. இதில் பூங்கோதை சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஷர்மிளா படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
போலீசார் விசாரணை
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த பூங்கோதையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் கண் எதிரே தாய் விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story