ரவுடிகள் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ரவுடிகள் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
புதுக்கோட்டை:
தமிழகத்தில் ரவுடியிசம், கொலை, கொள்ளை குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு போலீசார் கடந்த ஓரிரு தினங்களாக அதிரடி சோதனை நடத்தி கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலும் ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் திருக்கோகர்ணம் பகுதியில் தொடர் குற்ற செயல், ரவுடியிசத்தில் ஈடுபட்டு வந்த மணிகண்டன் (வயது 27), விஜய் என்கிற கோழி விஜய் (21), கருப்பசாமி (21) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பரிந்துரை செய்ததின் பேரில், கலெக்டர் கவிதாராமு உத்தரவிட்டார். இதையடுத்து அதற்கான நகலில் 3 ரவுடிகளிடம் போலீசார் கையெழுத்து பெற்று அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story