கைது
ரேஷன் அரிசி கடத்திய கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
சாத்தூர்,
சாத்தூரில் காரில் கடத்தி வரப்பட்ட 1Ñ டன் ரேஷன் அரிசியை சாத்தூர் டவுன் போலீசார் பறிமுதல் செய்து கார் டிரைவரை கைது செய்தனர்.
வாகன சோதனை
சாத்தூர் படந்தால் சந்திப்பில் சாத்தூர் டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி காரை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை பின் தொடர்ந்து துரத்தி சென்றனர். சாத்தூர் அருகே போத்திரெட்டிபட்டி கிராமத்தில் வைத்து கிராம மக்கள் உதவியுடன் காரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
பறிமுதல்
பின்னர் காரில் வந்தவரை பிடித்து சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் சிவகாசியில் இருந்து கோவில்பட்டிக்கு காரில் ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து ரேஷன் அரிசி கடத்திய கார் டிரைவர் வெள்ளையாபுரத்தை சேர்ந்த கமலகண்ணன் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்திய கார் மற்றும் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story