சரக்கு லாரி திடீர் பழுது: போக்குவரத்து பாதிப்பு


சரக்கு லாரி திடீர் பழுது: போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 27 Sept 2021 1:19 AM IST (Updated: 27 Sept 2021 1:19 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் சரக்கு லாரியில் திடீரென பழுது ஏற்பட்டு நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேட்டை:
நெல்லை சங்கர்நகர் தனியார் சிமெண்டு ஆலையில் இருந்து சிமெண்டு ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி செங்கோட்டைக்கு புறப்பட்டது. நெல்லை டவுன் கண்டியபேரி வழியாக தென்காசி மெயின் ரோடு வந்தபோது கண்டியபேரி விலக்கில் லாரியின் முன்பக்க சக்கரம் அருகே  திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் லாரி செல்ல முடியாமல் அதே இடத்தில் நின்றதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.

Next Story