கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் மாநில அளவில் திருச்சி 2 வது இடம்


கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் மாநில அளவில் திருச்சி 2 வது இடம்
x
தினத்தந்தி 27 Sept 2021 1:54 AM IST (Updated: 27 Sept 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் மாநில அளவில் திருச்சி 2-வது இடத்தை பிடித்தது

திருச்சி
திருச்சி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்து 82 ஆயிரத்து 552 ஆகும். அவர்களில் கடந்த சனிக்கிழமை வரை 12 லட்சத்து 16 ஆயிரத்து 494 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது 53.3 சதவீதம் ஆகும். திருச்சி மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த 12 ந் தேதி மற்றும் 19 ந் தேதிகளில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. இதன்மூலம் 1 லட்சத்து 74 ஆயிரத்து 780 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது, 132 சதவீதமாகும். அதாவது இலக்கை தாண்டி தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் 3 வதுகட்டமாக நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் நேற்று ஊரக பகுதிகளில் 353 இடங்களிலும், மாநகராட்சி பகுதியான நகர்ப்புற பகுதிகளில் 162 இடங்களிலும் என மொத்தம் 515 இடங்களில் கொரோனோ சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தபட்டது. இரவு 7 மணிவரை நடந்த முகாம் மூலம் மாவட்டத்தில் 97,199 பேருக்கு முதல் மற்றும் 2 ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநில அளவில் ஒரே நாளில் அதிக தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டங்களில், திருச்சி மாவட்டம் 2 வது இடத்தை பிடித்துள்ளதாக கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.



Next Story