எழும்பூர் கோர்ட்டில் மக்கள் நீதிமன்றம் மூலம் 43 வங்கி கடன் பிரச்சினைக்கு தீர்வு


எழும்பூர் கோர்ட்டில் மக்கள் நீதிமன்றம் மூலம் 43 வங்கி கடன் பிரச்சினைக்கு தீர்வு
x
தினத்தந்தி 27 Sep 2021 9:11 AM GMT (Updated: 27 Sep 2021 9:11 AM GMT)

எழும்பூர் கோர்ட்டில் மக்கள் நீதிமன்றம் மூலம் 43 வங்கி கடன் பிரச்சினைக்கு தீர்வு.

சென்னை,

சென்னை எழும்பூர் கோர்ட்டில் செயல்பட்டு வரும் வட்டார சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதை எழும்பூர் பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டின் தலைமை நீதிபதி என்.கோதண்டராஜ் தொடங்கி வைத்தார்.

வங்கி கடன் தொடர்பான 75 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. மனுதாரர்கள் பெற்ற கடன் தொகைக்கு ஏற்றாற்போல் வட்டி குறைப்பு, வட்டியும் அசலும் குறைப்பு என 43 மனுக்கள் மீது சமரச தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் மொத்தம் ரூ.64 லட்சத்துக்கான வங்கிகடன் பிரச்சினை முடிவுக்கு வந்தது.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் தலைமை நீதிபதி கிரிஜாராணி, வங்கி அதிகாரிகள் சி.எஸ்.ரெட்டி, பிரஜா பிரசாத், எழும்பூர் கோர்ட்டு தலைமை அதிகாரி ராஜ்குமார், ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ஆர்.எஸ்.துரியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story