திருச்செந்தூர், காயாமொழியில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


திருச்செந்தூர், காயாமொழியில்  தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 27 Sep 2021 11:45 AM GMT (Updated: 27 Sep 2021 11:45 AM GMT)

திருச்செந்தூர், காயாமொழியில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

திருச்செந்தூர்:
திருச்செந்தூர், காயாமொழியில் பிறந்த நாளை முன்னிட்டு தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சி.பா. ஆதித்தனார் பிறந்த நாள்
`தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் 117-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு திருச்செந்தூர் வட்டார நாடார் வியாபாரிகள் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெற்கு மாவட்ட தலைவர் காமராசு நாடார், திருச்செந்தூர் வட்டார நாடார் வியாபாரிகள் சங்க செயலாளர் செல்வகுமார், துணை செயலாளர் சத்தியசீலன், துணை தலைவர்கள் அழகேசன், பால்வண்ணன், நிர்வாகிகள் பாலமுருகன், முருகன், முத்துராஜ், தங்ககுமார், லட்சுமணன், வெங்கடேஷ், உறுப்பினர் ஆசிரியர்
செல்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் மத்திய மந்திரி
திருச்செந்தூரில் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு பாட்டாளி மக்கள் கட்சி வடக்கு மண்டல இணை செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஏ.கே.மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 
'தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் தமிழுக்காக தன்னை அர்ப்பணித்தவர், தமிழை வளர்த்தவர். அவருடைய பிறந்த நாளை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து 40 ஆண்டு காலமாக கொண்டாடி வருகிறது. நான் நீண்ட நாட்களாக அவருடைய பிறந்த பகுதியில் உள்ள அவரது சிலைக்கு மாலை போட வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன். இன்று அதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒவ்வொரு தமிழனும் அவருடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டும்' என்றார். 
நிகழ்ச்சியில், பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளர் ராமச்சந்திரன், தெற்கு மாவட்ட செயலாளர் பரமகுரு, தெற்கு மாவட்ட தலைவர் சிவபெருமாள், வடக்கு மாவட்ட செயலாளர் வேலுச்சாமி, மத்திய மாவட்ட செயலாளர் சின்னத்துரை, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, நகர செயலாளர் வேல்முருகன், ஆழ்வார்திருநகரி ஒன்றிய தலைவர் பார்வதி முத்து, தூத்துக்குடி மாநகர செயலாளர் ஜமால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காயாமொழி
சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளை முன்னிட்டு காயாமொழியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு ஊர் மக்கள் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, மணிமண்டபத்தில் உள்ள ராமச்சந்திர ஆதித்தனார் உருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், பாலசுப்பிரமணிய ஆதித்தன், ராகவ ஆதித்தன், வரதராஜ ஆதித்தன், முருகன் ஆதித்தன், ராஜன் ஆதித்தன், ராஜேந்திர ஆதித்தன், ராதாகிருஷ்ணன் ஆதித்தன், அச்சுத ஆதித்தன், ராஜா ராமலிங்க ஆதித்தன், தனிகேச ஆதித்தன், ஜவகர் ஆதித்தன், குமரேச ஆதித்தன், எஸ்.எஸ்.ஆதித்தன், ஜெயந்திர ஆதித்தன், அமிர்தலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்து முன்னணி-தி.மு.க.
இந்து முன்னணி சார்பில் மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பரமன்குறிச்சி மந்திரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க. சார்பில் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட பிரதிநிதி மதன், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் தனலட்சுமி, ஒன்றிய ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் கணேசன், துணை அமைப்பாளர் பொண்ணுலிங்கம், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் துரை, பரமன்குறிச்சி தொடக்க கூட்டுறவு சங்க இயக்குனர் குமார், உடன்குடி ஒன்றிய ஆதிதிராவிட நல அணி துணை அமைப்பாளர் கோபி, ஒன்றிய பிரதிநிதி ராஜதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்து மக்கள் கட்சி
சி.பா.ஆதித்தனார் சிலைக்கு இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலை செழியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திருச்செந்தூர் தொகுதி அமைப்பாளர் லட்சுமணன், ஆழ்வை ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் ராமகிருஷ்ணன், காயாமொழி முகாம் பொறுப்பாளர் தர்மலிங்கம், இஸ்லாமிய ஜனநாயக பேரவை பொறுப்பாளர் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்து மக்கள் கட்சி சார்பிலும் மரியாதை செலுத்தப்பட்டது. இதில், தெற்கு மாவட்ட தலைவர் சக்திவேல், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முத்துக்குமார், திருச்செந்தூர் ஒன்றிய அமைப்பாளர் பால்ராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வனேஷ், திருச்செந்தூர் ஒன்றிய துணை தலைவர் ராஜேஷ், ஒன்றிய அமைப்பு செயலாளர் பாலச்சந்திரன், காயாமொழி ஊராட்சி அமைப்பாளர் குமார், கிளை செயலாளர்கள் சுந்தரராஜ், ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Next Story