கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி


கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
x
தினத்தந்தி 27 Sep 2021 12:41 PM GMT (Updated: 27 Sep 2021 12:41 PM GMT)

3-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்: கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி.

கும்மிடிப்பூண்டி,

தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் தமிழக அரசு தொடர்ந்து தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் நேற்று 3-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 11 இடங்களையும் சேர்த்து கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் நேற்று மொத்தம் 107 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இந்த முகாம்கள் வாயிலாக மொத்தம் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் இலக்கை அதிகாரிகள் நிர்ணம் செய்து இருந்தனர்.

மேற்கண்ட தடுப்பூசி முகாம்களை பொன்னேரி கோட்டாட்சியர் செல்வம் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது வட்டார மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜ், தாசில்தார் மகேஷ், வட்டார வளர்ச்சி அதிகாரி வாசுதேவன், ஒன்றியக்குழுத்தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் யமுனா ஆகியோரும் உடன் சென்றனர்.

கும்மிடிப்பூண்டி நேற்று மேகமூட்டத்துடன் மழைக்கான வானிலை நிலவியதால் பொதுமக்கள் அதிக அளவில் தடுப்பூசி போட்டு கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும் இரவு 7 மணி வரை 10 ஆயிரத்து 402 பேர் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story