விவசாய சங்கத்தினர் சாலை மறியல் 67 பேர் கைது


விவசாய சங்கத்தினர் சாலை மறியல் 67 பேர் கைது
x
தினத்தந்தி 27 Sept 2021 6:21 PM IST (Updated: 27 Sept 2021 6:21 PM IST)
t-max-icont-min-icon

அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி தாராபுரத்தில் சாலை மறியல் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் 2 பெண்கள் உள்பட 67 பேரை போலீசார் கைது செய்தனர்.

தாராபுரம்
 மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி தாராபுரத்தில் சாலை மறியல் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் 2 பெண்கள் உள்பட 67 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாலை மறியல்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாய சங்கங்கள் சார்பில் நேற்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்த சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாய சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகள் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து இருந்தன. 
அதன்படி வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாய சங்கங்கள் சார்பில் நேற்று தாராபுரம் தாலுகா அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பல அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் இணைந்து ஒன்றிய அரசை கண்டித்து புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் பெட்ரோல் டீசல் கியாஸ் விலை உயர்வைக் கண்டித்தும் பொது நிறுவனங்கள் தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
67 பேர் கைது
 அப்போது  தாலுகா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 67 பேர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் தாராபுரம்-கரூர் பழனி ஒட்டன்சத்திரம் செல்லும் போக்குவரத்து அரை மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டது.

காங்கேயம்
 காங்கேயம் பஸ் நிலைய வளாகத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட குழு உறுப்பினர் கே.திருவேங்கடசாமி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் திருப்பூர் மண்டல தலைவர் சென்னியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 



Next Story