தூத்துக்குடியில் 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


தூத்துக்குடியில் 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 27 Sept 2021 8:51 PM IST (Updated: 27 Sept 2021 8:51 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது

தூத்துக்குடி:
தூத்துக்குடி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீசார் 2-ம் கேட் பகுதியில் சோதனை செய்தனர். அங்கு உள்ள ஒரு குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அங்கு 59 மூட்டைகளில் இருந்த 2.6 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசி பதுக்கியது தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த உசேன் மகன் செய்யது அப்துல்கரீம் (35) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து பறிமுதல் செய்த ரேசன் அரிசியை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story