பெங்களூருவில் இருந்து திருக்கோவிலூருக்கு அழுகிய காய்கறி மூட்டைக்குள் வைத்து மது பாட்டில்கள் கடத்தல்
பெங்களூருவில் இருந்து திருக்கோவிலூருக்கு அழுகிய காய்கறி மூட்டைக்குள் வைத்து மது பாட்டில்கள் கடத்தல்
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, தலையில் மூட்டைகளை சுந்து சென்ற 2 பேர் போலீசாரை கண்டதும் மூட்டைகளை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினர். உடனே போலீசார் அந்த 2 மூட்டைகளையும் பிரித்து பார்த்தபோது உள்ளே அழுகிய காய்கறிகளுக்கு இடையே மதுபாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டபிடித்தனர். மொத்தம் 92 கர்நாடக மாநில மதுபாட்டில்கள் இருந்தன. விசாரணையில் அந்த மதுபாட்டில்கள் பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை கைப்பற்றிய போலீசார் தப்பி ஓடிய 2 பேரையும் வலைவீசி தேடிவருடன், எவ்வாறு கடத்தி வரப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story