3 நாட்களுக்கு பிறகு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்


3 நாட்களுக்கு பிறகு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 27 Sept 2021 11:39 PM IST (Updated: 27 Sept 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

அருணாசலேஸ்வரர் கோவிலில் 3 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

திருவண்ணாமலை
அருணாசலேஸ்வரர் கோவிலில் 3 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். கோவிலின் பின்புறம் உள்ள மலையைச் சுற்றி கிரிவலம் செல்கின்றனர். 

இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் இக்கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு வருகிறது. ஆகையால் கடந்த 24-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் கோவிலின் கோபுர நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டு இருந்தன. 

பக்தர்கள் ராஜகோபுரத்தின் முன்பு நின்று சாமி தரிசனம் செய்தனர். 3 நாட்களுக்கு பிறகு நேற்று கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டதில் இருந்து ஏராளமான பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் ெசய்தனர். 

Next Story