மாவட்ட செய்திகள்

விபத்தில் காயமடைந்த மூதாட்டி சாவு + "||" + Grandmother injured in accident dies

விபத்தில் காயமடைந்த மூதாட்டி சாவு

விபத்தில் காயமடைந்த மூதாட்டி சாவு
நெல்லையில் விபத்தில் காயமடைந்த மூதாட்டி இறந்தார்.
நெல்லை:
பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் அய்யன் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் முகமது மீரான். முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மனைவி நசீம் (வயது 65). இவர் சம்பவத்தன்று பாளையங்கோட்டை மிலிட்டரி கேன்டீன் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் வந்த தனியார் பஸ் நசீம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நசீம் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விபத்தில் காயம் அடைந்த முன்னாள் ராணுவ வீரர் சாவு
விபத்தில் காயம் அடைந்த முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார்.
2. கடம்பூர் அருகே மோட்டார் சைக்கிள்-ஜீப் மோதல்; 2 வாலிபர்கள் பலி; 2 பேர் படுகாயம்
கடம்பூர் அருகே மோட்டார்சைக்கிளும், ஜீப்பும் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தார்கள்.
3. பவானி அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதல் அரசு பெண் டாக்டர், கணவர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி சாவு
பவானி அருகே கார்- லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் அரசு பெண் டாக்டர் மற்றும் அவருடைய கணவர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி செத்தனர்.
4. விபத்தில் காயம் அடைந்த வாலிபர் சாவு
நெல்லையில் விபத்தில் காயம் அடைந்த வாலிபர் இறந்தார்.
5. விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு
விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.