மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையத்தில் மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டெல்லி விவசாயிகள் அறிவித்துள்ள நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைமை செயற்குழு உறுப்பினர் நிலா இக்பால் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் மைதீன், முத்துக்குமார், செய்யது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை செயலாளர் சாகுல் அமீது, நெல்லை மாவட்ட விவசாய அணி செயலாளர் ஜாகீர், தி.மு.க. பகுதி செயலாலர் துபை சாகுல், காங்கிரஸ் மண்டல தலைவர் ரசூல் ைதீன், ம.ஜ.க. மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், பேட்டை நகர செயலாளர் சங்கர், மாவட்ட பொருளாளர் பத்தமடை கனி, டில்லி சம்சு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story