சி.பா.ஆதித்தனார் உருவப்படத்துக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை


சி.பா.ஆதித்தனார் உருவப்படத்துக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 28 Sept 2021 1:35 AM IST (Updated: 28 Sept 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை காங்கிரஸ் அலுவலகத்தில் சி.பா.ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நெல்லை:
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 117-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு நெல்லை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். சி.பா.ஆதித்தனார் உருவப்படத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில துணை தலைவர் காமராஜ், அமைப்பு பொது செயலாளர் சொக்கலிங்க குமார், மாவட்ட துணை தலைவர்கள் வெள்ளைபாண்டியன், கவிபாண்டியன், சிவாஜி சமூக நல பேரவை மாவட்ட தலைவர் கஸ்பர்ராஜ், மகாராஜன், செல்வம், ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் மாநகர் மாவட்ட தலைவர் தனசிங் பாண்டியன்,  செய்யது அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story