புகார் பெட்டி
புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார்பெட்டிக்கு 8939078888 என்ற ‘வாட்ஸ்அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான புகார்கள் வருமாறு:-
நாய்கள் தொல்லை
மதுரை மாவட்டம் வாகைக்குளம், அய்யப்பாநகர், மலேசியாநகர், சீனிவாசநகர் ஆகிய நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதியில் பொதுமக்கள் வாகனங்களில் செல்லும் போது நாய்களால் விபத்து ஏற்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அய்யப்பாநகர், பொதுமக்கள்
மழைநீர் வடிகால் தேவை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் காரைக்குளம் ஊராட்சி சண்முகநாதபுரம் ஆதி திராவிடர் காலனியில் மழை நீர் வடிகால் இல்லாததால் வீதியெங்கும் குளம் போல தண்ணீர் தேங்கி உள்ளது. எனவே மழை நீர் வடிகால் அமைத்து கொடுக்க வேண்டும்.
-முருகேசன், சண்முகநாதபுரம்.
மீண்டும் பஸ் இயக்கப்படுமா?
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் தனக்கன்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கலமூர்த்தி நகரில் இருந்து புதூர் பகுதிக்கு அரசு பஸ் இயங்கி வந்தது. தற்போது கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் அந்த பஸ் இயங்கவில்லை. அதனால் எங்கள் பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே மீண்டும் அந்த பஸ்சை அதே வழிதடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ப.நாகராஜ், சமூக ஆர்வலர்.
குப்பைகள் அள்ளப்படாத நிலை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தேரோடும் மேலரத விதியில் கடந்த 3 நாட்களாக குப்பை அல்லாமல் சுகாதாரகேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் உடனே அந்த பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், திருப்பரங்குன்றம்.
அடிப்படை வசதி தேவை
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கருங்காலக்குடி கிராமம் பூஞ்சோலை நகரில் ஏறத்தாழ 50 வீடுகள் உள்ளன. இங்கு அடிப்படை வசதியான தெரு விளக்கு, சாலை வசதி மற்றும் சாக்கடை வசதி என எதுவும் இதுவரை செய்து தரவில்லை. எனவே அந்த பகுதியில் அடிப்படை வசதிகளை உடனே செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பூஞ்சோலை நகர், பொதுமக்கள்
வாசனை திரவிய ஆலை வேண்டும்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் இருந்து பூக்களை சரியான நேரத்திற்கு பூ விற்பனை நிலையத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் உசிலம்பட்டி பகுதியில் வாசனை திரவிய ஆலை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தால் ஏராளமான பூ வியாபாரிகளுக்கு வசதியாக இருக்கும். இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வாசனை திரவிய ஆலை அமைந்தால் உசிலம்பட்டி பகுதியில் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.
-ரஞ்சித்குமார், உசிலம்பட்டி
தெருவிளக்கு வசதி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மீனாம்பிகை நகர் பின் பகுதியில் உள்ள தெருவில் தெருவிளக்குகள் எரியாமல் இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக இந்த பிரச்சினை இருக்கிறது. இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதுபற்றி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மீனாம்பிகை நகர், பொதுமக்கள்.
குண்டும் குழியுமான சாலை
மதுரை மாவட்டம் எல்லீஸ்நகர் பால் பூத் பகுதிக்கு செல்லும் பாதை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும்.
-எல்லீஸ்நகர், பொதுமக்கள்.
சுகாதார சீர்கேடு
மதுரை மாநகராட்சி 58-வது வார்டு மேல அனுப்பானடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு காலனியில் 8-வது பிரிவில் சாலை எங்கும் மழைநீர், கழிவுநீர் தேங்கி இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மேல அனுப்பானடி, பொதுமக்கள்.
கழிவுநீர் கால்வாய் வேண்டும்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் கார்ப்பரேஷன் வீதியில் கால்வாய் இல்லாததால் மழைநீர் வள்ளியப்ப செட்டியார் ஊருணி கிழக்கு கரையில் இருந்து பெருக்கெடுத்து சாலையில் செல்கிறது. மழை நீரோடு, கழிவு நீரும் சேர்ந்து வந்து குடியிருக்கும் வீட்டை சூழ்ந்து தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சாலையும் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே கழிவு நீர்வாய்க்கால் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா ?
- நாகநாதன், தேவகோட்டை.
சேதமடைந்த சாலை
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட அனுப்பானடி பகுதியில் தெப்பக்குளத்திலிருந்து அனுப்பானடி பஸ் நிறுத்தத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த பகுதிகளில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரியும் உள்ளன. மழை நேரங்களில் சாலை முழுவதும் மழைநீரால் சூழப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில் விபத்துக்களும் ஏற்படுகின்றன. எனவே இந்தப் பகுதியில் தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜாகிர் அப்பாஸ், அனுப்பானடி.
Related Tags :
Next Story