மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியாததால் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Newlyweds commit suicide by hanging

திருமணத்திற்கு வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியாததால் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை

திருமணத்திற்கு வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியாததால் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
திருமணத்திற்கு வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியாததால் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
துமகூரு: துமகூரு மாவட்டம் கொரட்டகெரே தாலுகா தூவினகெரே கிராமத்தை சேர்ந்தவர் அனுமந்தராஜ் (வயது 26). இவருக்கும், சிராவை சேர்ந்த பூமிகாவுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக தான் திருமணம் நடந்திருந்தது. திருமணமான புதிதில் கணவன், மனைவி சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர். கடந்த சில நாட்களாக மனைவி பூமிகாவுடன் அனுமந்தராஜ் சரியாக பேசவில்லை என்று தெரிகிறது. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த அனுமந்தராஜ் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் கொரட்டகெரே போலீசார் விரைந்து வந்து அனுமந்தராஜ் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது திருமணத்திற்காக பல்வேறு நபர்களிடம் அனுமந்தராஜ் கடன் வாங்கி இருந்தார். அந்த கடனை அவரால் திரும்ப கொடுக்க முடியவில்லை. மாறாக கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கொடுக்கும்படி கேட்டு வந்துள்ளனர். 

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மனம் உடைந்து வாழ்ந்து வந்த அவர், தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கொரட்டகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு வாங்கிய கடனால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்த சம்பவம் கொரட்டகெரேயில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பள்ளிபாளையம் அருகே புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
பள்ளிபாளையம் அருகே புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
நொய்யல் அருகே புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
3. புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
4. திருமுல்லைவாயலில் சோகம்: முதலிரவில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை - புதுமணப்பெண் அதிர்ச்சி
முதலிரவில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு புதுமணப்பெண் அதிர்ச்சி அடைந்தார்.
5. புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
ஒரத்தநாடு அருகே திருமணமான 5 மாதங்களில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக இருதரப்பு உறவினர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது