ராமநகர் அருகே ரெசார்ட் ஓட்டலில் ஹைட்ரோ கஞ்சா வளர்த்த ஈரான் வாலிபர் கைது
ஹைட்ரோ கஞ்சா வளர்த்த ஈரான் வாலிபர் கைது
பெங்களூரு:
பெங்களூருவில் போதைப் பொருட்கள் விற்கும் கும்பல்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் ராமநகர் மாவட்டம் பிடதியில் உள்ள ஒரு ரெசார்ட் ஓட்டலில் தங்கியிருக்கும் வெளிநாட்டு வாலிபர் போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பதாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த ஓட்டலில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது ஓட்டலில் தனியாக ஒரு வில்லாவை வாடகைக்கு எடுத்து ஈரான் நாட்டு வாலிபர் தங்கியிருந்தார். அந்த வில்லாவில் போலீசார் சோதனை நடத்தினார்கள் அப்போது அங்கு ஹைட்ரோ கஞ்சா வளர்க்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறிய சிறிய தொட்டிகளில் அவர் கஞ்சாவை வளர்த்து வந்திருந்தார்.
இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அவர் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஜாவித் என்று தெரிந்தது. பிடதியில் இருந்து பெங்களூருக்கு வந்து ஹைட்ரோ கஞ்சா, பிற போதைப் பொருட்களை விற்பனை செய்து பணம் சம்பாதிப்பது தெரியவந்தது. அத்துடன் ஓட்டலில் ஹைட்ரோ கஞ்சா வளர்த்தது பற்றி அங்கிருந்த அதிகாரிகள் ஊழியர்கள் தெரியாமல் இருந்ததாக தெரிகிறது. அவரிடம் இருந்து ரூ.3 கோடி மதிப்பிலான ஹைட்ரோ கஞ்சா மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story