மாவட்ட செய்திகள்

குடிநீரில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் + "||" + Public road blockade condemning mixing of sewage in drinking water

குடிநீரில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீரில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீரில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்.
திரு.வி.க. நகர்,

சென்னை ஓட்டேரி, அருந்ததி நகரில் கோவிந்தபுரம், செங்கன் தெரு, கந்தன் தெரு, வீரராகவன் தெரு உள்ளிட்ட 16 தெருக்கள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.


நேற்று காலையும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள், திடீரென அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த புளியந்தோப்பு உதவி கமிஷனர் அழகேசன், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் திரு.வி.க.நகர் குடிநீர் வாரிய பகுதி என்ஜினீயர் விஜயபாஸ்கர் சம்பவ இடத்துக்கு வந்து இந்த பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என உறுதி அளித்தார். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. கழிவுநீர் கலந்த மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் கழிவுநீருடன் கலந்த மழைநீரை அகற்ற கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் வண்ணாரப்பேட்டையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
2. சாலையில் பாய்ந்தோடும் மழைநீரால் அவதி கால்வாய் அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்
சாலையில் பாய்ந்தோடும் மழைநீரால் அவதிக்குள்ளான பொதுமக்கள் கால்வாய் அமைக்கக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு எதிர்ப்பு; சுயேச்சை வேட்பாளர் சாலை மறியல்
அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு எதிர்ப்பு; சுயேச்சை வேட்பாளர் சாலை மறியல்.
4. வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் தங்க மூக்குத்தி பரிசு அ.தி.மு.க. சாலை மறியல்
குன்றத்தூர் ஒன்றியத்தில் வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் தங்க மூக்குத்தி பரிசாக கொடுத்ததாக கூறி அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5. தி.மு.க. வேட்பாளரை மிரட்டியதாக புகார் முன்னாள் கவுன்சிலரை கைது செய்ய எதிர்ப்பு; அ.தி.மு.க.வினர் சாலை மறியல்
பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தேர்தல் பிரசாரத்தின்போது தி.மு.க. வேட்பாளரை மிரட்டிய புகாரில் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலரை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.