விழிப்புணர்வு கூடைப்பந்தாட்ட போட்டி
விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் பட்டிவீரன்பட்டியில் விழிப்புணர்வு கூடைப்பந்தாட்ட போட்டி நடந்தது.
பட்டிவீரன்பட்டி:
மாணவ-மாணவிகளின் விளையாட்டு திறனை மேம்படுத்தி, ஊக்குவிப்பதற்காக விழிப்புணர்வு கூடைப்பந்தாட்ட போட்டி பட்டிவீரன்பட்டியில் நடந்தது. வத்தலக்குண்டு இந்திய மருத்துவ சங்கம், வத்தலக்குண்டு ரோட்டரி சங்கம் மற்றும் பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி.பள்ளிகள் ஆகியவை சார்பில் இந்த போட்டி நடத்தப்பட்டது.
2 நாட்கள் நடைபெற்ற இந்த கூடைப்பந்தாட்ட போட்டிகளில் 150 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது விளையாட்டு திறனை வெளிப்படுத்தினார்கள். இவர்களுக்கு இலவச சீருடை, சான்றிதழ், பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டன. இதனை இந்திய கபடி அணியின் முன்னாள் பயிற்சியாளர் பாஸ்கரன் வழங்கினார்.
இதில் வத்தலக்குண்டு இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் நந்தகோபால், ரோட்டரி சங்க தலைவர் ஜெயராமன், இந்து நாடார்கள் உறவின்முறை சங்க தலைவர் முரளி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் என்.எஸ்.வி.வி. அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story