சிற்றம்பாக்கம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்
சிற்றம்பாக்கம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் சிற்றம்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம், ரேஷன் கடை, பிள்ளையார் கோவில் ஆகிய 3 இடங்களில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்பேரில், கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு சிற்றம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ரமணி சீனிவாசன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணை தலைவர் லட்சுமி, வார்டு உறுப்பினர்கள் வெங்கடேசன், பிரதாப், மணிகண்டன், கஸ்தூரி, இந்துமதி, ஊராட்சி செயலாளர் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க.வின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் சிற்றம் ஜெ.சீனிவாசன் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போடும் முகாமை துவக்கி வைத்தார். இதில் திரளான பொதுமக்கள் உரிய சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிந்து தடுப்பூசியை செலுத்தி கொண்டனர்.

Related Tags :
Next Story