மாடுகளை திருடியவர் கைது


மாடுகளை திருடியவர் கைது
x
தினத்தந்தி 28 Sept 2021 7:50 PM IST (Updated: 28 Sept 2021 7:50 PM IST)
t-max-icont-min-icon

மாடுகளை திருடியவர் கைது

போடிப்பட்டி
குமரலிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் நாட்டு பசு மாடு ஒன்றை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் மாட்டுக்கு தீனி போட்டு கட்டி வைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் காலை  6 மணியளவில் பால் கறப்பதற்காக சென்று பார்த்தபோது மாட்டைக் காணவில்லை.கன்றுக்குட்டி மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தது. மாடு காணாமல் போன நிலையில், அக்கம்பக்கத்தில் தேடிக்கொண்டிருந்த போது அதே இரவில் காளியம்மாள் என்பவருடைய மாடும் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து குமரலிங்கம் போலீஸ் நிலையத்தில் தங்கராஜ் புகார் தெரிவித்தார்.இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மாட்டைதிருடிச் சென்றவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.அதில் தங்கராஜின் பக்கத்துக்கு தோட்டத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் வயது 28 என்பவர் 2 மாடுகளையும் திருடிச் சென்றது தெரியவந்தது.இதனையடுத்து அவர் திருடிச் சென்ற மாடுகளை அவரிடமிருந்து மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.மேலும் மோகன்ராஜைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

----
Reporter : T. Subakaran  Location : Tirupur - Udumalaipet - Bodipatti

Next Story