கழிஞ்சூர் ஏரியில் பிணமாக கிடந்த வாலிபர்


கழிஞ்சூர் ஏரியில் பிணமாக கிடந்த வாலிபர்
x
தினத்தந்தி 28 Sept 2021 10:35 PM IST (Updated: 28 Sept 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

கழிஞ்சூர் ஏரியில் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா, அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காட்பாடி,

விருதம்பட்டு காளியம்மன் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அக்பர் (வயது 21). பிளாஸ்டிக் குடம் செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 26-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் நண்பர்களுடன் மது அருந்த கழிஞ்சூர் ஏரிக்கு வந்துள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை. 

இந்த நிலையில் அவர் அங்குள்ள ஏரியில் நேற்று பிணமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் விருதம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, காட்பாடி தீயணைப்பு வீரர்களை வரவழைத்து, பொதுமக்கள் உதவியுடன் ஏரியில் ஏரியில் பிணமாக கிடந்த அக்பர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மது அருந்த வந்த அக்பர் எப்படி இறந்தார், மது அருந்தியபோது நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது அவர் ஏரியில் விழுந்து இறந்தாரா என்பது தெரியவில்லை.
இது குறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story