மாவட்ட செய்திகள்

விழுப்புரத்தில்அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration

விழுப்புரத்தில்அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில்அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடடனா்.
விழுப்புரம், 

விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு நேற்று காலை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இதற்கு அமைப்பின் தலைவர் பழமலை தலைமை தாங்கினார். பொருளாளர் சேஷையன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சின்னராசு, பலராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலியமூர்த்தி வரவேற்றார். மாநில துணை செயலாளர் சகாதேவன், புதுச்சேரி செயலாளர் தமிழ்வாணன் ஆகியோர் தொடக்க உரையாற்றினர். பொதுச்செயலாளர் ராமச்சந்திரன், கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.

2015 நவம்பர் மாதம் முதல் வழங்க வேண்டிய 70 மாத அகவிலைப்படியை நிலுவையுடன் வழங்க வேண்டும், மருத்துவப்படியை ரூ.300 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 

குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும், பென்சனை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்றோர் அமைப்பினர் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர். முடிவில் விழுப்புரம் கிளை துணைத்தலைவர் கலியமூர்த்தி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தொழிலாளர் சங்க தேர்தல் நடத்தக்கோரி காகித ஆலை முன்பு ஆர்ப்பாட்டம்
தொழிலாளர் சங்க தேர்தல் நடத்தக்கோரி காகித ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது
2. ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. தாலுகா அலுவலகத்தில் கிராமமக்கள் குடியேறும் போராட்டம்
வெம்பக்கோட்டை அருகே நடைபாதை வசதி கேட்டு தாலுகா அலுவலகத்தில் கிராமமக்கள் குடியேறும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்