முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தொடர்மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தேனி:
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை. ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் நீர்ப்பாசன ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாறு, தேக்கடியில் தொடர்மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக, அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அதன்படி முல்லைப்பெரியாற்றில் நேற்று முன்தினம் நீர்வரத்து வினாடிக்கு 687 கன அடியாக இருந்தது. ஆனால் நேற்று அணைக்கு வினாடிக்கு 1,310 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 128.10 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தேனி மாவட்டம் மற்றும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு (மில்லிமீட்டரில்) வருமாறு:- பெரியாற்றில் 28, தேக்கடியில் 16.8, கூடலூரில் 4.8, உத்தமபாளையத்தில் 3.2 மழை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story