ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 20 பேர் போட்டியின்றி தேர்வு


ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 20 பேர் போட்டியின்றி தேர்வு
x
தினத்தந்தி 28 Sept 2021 11:40 PM IST (Updated: 28 Sept 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 20 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் 5 ஒன்றிய வார்டு உறுப்பினர், 10 ஊராட்சி மன்ற தலைவர், 33 ஊராட்சி வார்டு உறுப்பினர் என 48 காலி பதவி இடங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந்தேதி நடக்கிறது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 51 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 53 பேரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு 59 பேர் என மொத்தம் 163 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் 162 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

20 பேர் போட்டியின்றி தேர்வு

பின்னர் வேட்பு மனுக்களை திரும்ப பெறும் நாளில் 41 பேர் வாபஸ் பெற்றனர். தொடர்ந்து 20 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதில் விருத்தாசலம் ஒன்றியம் நறுமணம் ஊராட்சி மன்ற தலைவர், 19 ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
தற்போது 26 பதவி இடங்களுக்கு 101 பேர் போட்டி களத்தில் உள்ளனர். ஸ்ரீநெடுஞ்சேரி 6-வது வார்டு, காட்டுமன்னார்கோவில் நத்தமலை ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் என 2 வார்டு உறுப்பினர் பதவிக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இந்த 2 வார்டுகளும் ஆதிதிராவிடர் வகுப்புக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது.

Next Story