ரூ.1½ கோடியில் கட்டிய பள்ளிக்கட்டிடத்தில் விரிசல்
கலசபாக்கம் அருகே கட்டப்பட்ட அரசு பள்ளிக்கட்டிடத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை நேரில் ஆய்வு செய்த கலெக்டர் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கலசபாக்கம்
கலசபாக்கம் அருகே அரசு பள்ளிக்கட்டிடத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை நேரில் ஆய்வு செய்த கலெக்டர் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
உயர்நிலை பள்ளிக்கட்டிடம்
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட காந்தபாளையம் கிராமத்திலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு போதுமான கட்டிட வசதி இல்லாத காரணத்தால் கடந்த 2018-ம் ஆண்டு நபார்டு நிதி உதவியுடன் ரூ.1 கோடியே 61 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 8 வகுப்பறைகள், ஆய்வகம், கழிப்பறைகள் வசதிகளுடன் 2 அடுக்கு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிலையில் கட்டி முடிக்கப்பட்ட ஓராண்டு காலத்திலேயே தலைமை ஆசிரியர் அறையில் உள்ள சுவரில் விரிசல் ஏற்பட்டு உடைந்து உள்ளது.
இந்த நிலையில் கட்டி முடிக்கப்பட்ட ஓராண்டு காலத்திலேயே தலைமை ஆசிரியர் அறையில் உள்ள சுவரில் விரிசல் ஏற்பட்டு உடைந்து உள்ளது.
தரமற்ற கழிவறை
மேலும் நடைபாதை தரையில் உள்வாங்கி உள்ளது. கழிவறையும் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதோடு பள்ளி சுவர் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு பழுது ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்த கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சரவணன் நேரில் சென்று பார்வையிட்டு கலெக்டர் முருகேஷிடம் தகவலை தெரிவித்தார்.
இதனையடுத்து கலெக்டர் முருகேஷ் நேற்று காந்தபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நேரில் வந்து பள்ளி கட்டிடத்தை முழுவதையும் சுற்றி ஆய்வு செய்தார் அப்போது பள்ளி கட்டிடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை
பொதுப்பணித்துறை கட்டிட பொறியாளரிடம் கட்டிடத்தின் உறுதித் தன்மையை முழுமையாக ஆய்வு செய்து, பள்ளி கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ள சுவர்களை உடனடியாக அகற்றி புதிய சுவர்களை கட்ட வேண்டும். மேலும் கழிவறைகள் பழுதாகி உள்ளதையும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் இப்பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இப்பள்ளியில் கட்டிடத்தை சரி செய்யும் வரையில் பள்ளி மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்தி தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இப்பள்ளி வளாகத்தில் நடுநிலை வகுப்பறை கட்டிடம் பழுதாகி உள்ளதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது உதவி கலெக்டர் பிரதாப், பொதுப்பணித்துறை கட்டிட செயற்பொறியாளர் பரிமளா, கலசபாக்கம் ஒன்றிய குழுத்தலைவர் அன்பரசி ராஜசேகர், தாசில்தார் ஜெகதீஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி உட்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story