புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
சிவகங்கையில் திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிவகங்கை,
சிவகங்கை காமராஜர் சாலை வீரமாகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). இவர் வெல்டிங் கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் உறவுக்கார பெண்ணான தீபிகா (20) என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்தது. மணிகண்டனுக்கு குடிபழக்கம் இருந்தது. இதனால் அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று கணவருடன் கோபித்து கொண்டு தீபிகா தன்னுடைய நாத்தனார் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனம் உடைந்து மணிகண்டன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story