கரூர்-தாராபுரம் சாலையில் பொதுமக்கள் மறியல்


கரூர்-தாராபுரம் சாலையில் பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 29 Sept 2021 12:24 AM IST (Updated: 29 Sept 2021 12:24 AM IST)
t-max-icont-min-icon

பெயர் பலகையில் வெள்ளை அடித்ததை கண்டித்து கரூர்-தாராபுரம் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

க.பரமத்தி,
க.பரமத்தி ஒன்றியம், விஸ்வநாதபுரி பிரிவு ரோட்டில் கரூர்-தாராபுரம் சாலையில் தேவேந்திரகுல வேளாளர் சார்பில் பெயர் பலகை வைக்கப்பட்டது. அந்த பெயர் பலகையில் நெடுஞ்சாலைத்துறையினர் வெள்ளை அடித்துள்ளனர். இதையடுத்து விசுவநாதபுரியை சேர்ந்த பொதுமக்கள் பெயர் பலகையில் வெள்ளை அடித்ததை கண்டித்து கரூர்-தாராபுரம் சாலையில் நேற்று மதியம் 1 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பெயர் பலகையை சரி செய்து தருவதாக கூறினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கரூர்- தாராபுரம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story