214 பேருக்கு நலத்திட்ட உதவிகள்-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்


214 பேருக்கு நலத்திட்ட உதவிகள்-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்
x
தினத்தந்தி 29 Sept 2021 12:28 AM IST (Updated: 29 Sept 2021 12:28 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 214 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.

சிவகங்கை,

வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 214 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

சிவகங்கை மாவட்ட வேளாண்மைத்துறை மற்றும் அதன் ஒருங்கிணைந்த துறைகளுக்கான நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கலந்து கொண்டு வேளாண்மைத்துறையின் மூலம் 53 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 5 ஆயிரத்து 569 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறையின் மூலம் 8 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
தொடர்ந்து தோட்டக்கலைத்துறையின் மூலம் 40 பயனாளிகளுக்கு ரூ.33 லட்சத்து 5 ஆயிரத்து 820 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.7½ லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், கூட்டுறவுத்துறையின் மூலம் 103 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 1 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் சேர்த்து 214 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 53 லட்சத்து 61 ஆயிரத்து 389 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். முன்னதாக. விவசாயிகளுக்கான அமைக்கப்பட்டிருந்த வேளாண் கருவிகள் பயன்பாடு குறித்த கண்காட்சியினை அமைச்சர் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு)தனபால், கூட்டுறவுத்துறை இணை இயக்குனர் ரவிச்சந்திரன், வேளாண்மைத்துறை செயற்பொறியாளர் விஜயகுமார், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாரச்சந்தை
முன்னதாக சிவகங்கையை அடுத்த திருமாஞ்சோலையில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.41.39 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வாரச்சந்தை கட்டிட வளாகம் மற்றும் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் ஊருணி மேம்படுத்தப்பட்டு பேவர்பிளாக் தளம் அமைக்கப்பட்டுள்ளதையும் அமைச்சர் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் (பொறுப்பு)சிவராணி, சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மஞ்சுளா பாலசந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரெத்தினவேல், உமாமகேஸ்வரி, பால் உற்பத்தியாளர் சங்கத்தலைவர் சேங்கைமாறன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story