உலக சுற்றுலா தினம்; கிருஷ்ணாபுரம் கோவிலை சுற்றிப் பார்த்து மகிழ்ந்த ஆதரவற்ற முதியோர்கள்
உலக சுற்றுலா தினத்தையொட்டி கிருஷ்ணாபுரம் கோவிலை ஆதரவற்ற முதியோர்கள் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர்.
நெல்லை:
உலக சுற்றுலா தினத்தையொட்டி கிருஷ்ணாபுரம் வெங்டாசலபதி கோவிலை ஆதரவற்ற முதியோர்கள் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர்.
ஆதரவற்றவர்கள்
நெல்லை மாநகரில் கடந்த கொரோனா காலத்தில் சாலையோரத்தில் ஆதரவற்ற நிலையில் கிடந்த முதியோர், ஆதரவற்றவர்கள் மாநகராட்சி சார்பில் மீட்கப்பட்டனர். அவர்கள் நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியிலும், பெருமாள்புரம் இல்லத்திலும் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.
இவர்களின் மனதை உற்சாகப்படுத்தும் வகையில் சுற்றுலா அழைத்துச் செல்ல நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி டீன் ரவிச்சந்திரன் மற்றும் மனநல டாக்டர்கள் ஆலோசனை வழங்கினார்.
கோவிலை சுற்றிப் பார்த்தனர்
இந்த நிலையில் உலக சுற்றுலா தினத்தையொட்டி ஆதரவற்றோரை சுற்றுலா அழைத்துச் சென்று மகிழ்விக்க நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார்.
அதன் பேரில், தமிழர்களின் கலைத் திறமைக்கு சான்றாகவும் உலக புகழ்பெற்ற சிற்பங்களை கொண்ட பாளையங்கோட்டை அருகே கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோவிலுக்கு ஆதரவற்ற, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு உள்ள சிற்பங்களை ரசித்து புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் அந்த பகுதி ஓட்டலில் சிற்றுண்டி சாப்பிட்டனர். பின்னர் ஆதரவற்றோர் இல்லத்திற்கு திரும்பினர். இதன் மூலமாக 4 சுவற்றுக்குள்ளாக இருந்து வெளி உலகமே தெரியாமல் மன அழுத்தங்களை சுமந்து கொண்டிருந்தவர்களுக்கு ஒரு ஆறுதலான மனச்சுமையை இறக்கி வைக்க உதவும் மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.
இவர்களுடன் சோயா சரவணன், உளவியல் பேராசிரியர் மற்றும் மாணவிகள் சென்றிருந்தனர்.
Related Tags :
Next Story