தினத்தந்தி புகார் பெட்டி
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேறும் சகதியுமான மண் சாலை
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோட்டூர் பஞ்சாயத்து தாழம்பட்டி கிராமம் குமரன் நகர் மண் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் அதில் மழைநீர் தேங்கி குளம்போல் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், குமரன் நகர், புதுக்கோட்டை.
அதிகரிக்கும் நாய்களால் தொடரும் விபத்துகள்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. மேலும் இந்த நாய்கள் , அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தி செல்வதினால் அவர்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இந்த நிலை தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் நடந்து செல்லும் பொதுமக்களை, நாய்கள் கடிக்க வருவதுபோல் பயமுறுத்துவதால் அப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்துடன் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுந்தர்ராஜன், பொன்னமராவதி, புதுக்கோட்டை.
குண்டும், குழியுமான தார்ச்சாலை
அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா அலுவலகத்திலிருந்து இலங்கைச்சேரி வழியாக ஆதிகுடிக்காடு வரை உள்ள கிராம தார் சாலை போடப்பட்டு 6 மாதங்கள் ஆகிறது. இந்த நிலையில் சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் தாலுகா அலுவலகம் பின்புறம் உள்ள குட்டைலிருந்து மழை நீர் வெளியேறுவதற்காக சாலையின் நடுவில் சிறு மதகு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அது உடைந்து அந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வசந்த்பாண்டியன், இலங்கைச்சேரி, அரியலூர்.
பாலம் அமைக்கும் பணி விரைவில் முடிக்கப்படுமா?
அரியலூர் மாவட்டம் , அரியலூர் ஒன்றியம் மற்றும் ரெட்டிபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது, மு.புத்தூர் கிராமத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்கம் மற்றும் கால்வாய் அமைக்கும் பணியும், பழைய பாலங்களை அகற்றிவிட்டு புதிய பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக மு.புத்தூர் கிராமத்தில் தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்கம் செல்லும் நுழைவாயில் அருகே ஒரு பாலமும், ஏரி பகுதியில் ஒரு பாலமும் அமைக்கும் பணி நடக்கிறது. ஆனால் மாற்று பாதை போதிய பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. ஏரியினுள் மாற்று பாதை அமைக்கபட்டுள்ளதால் மழை பெய்யும் போது சேறும் சகதியுமாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடித்து தார்ச்சாலை அமைக்க வேண்டும்.
பொதுமக்கள், மு.புத்தூர், அரியலூர்.
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் சுகாதார சீர்கேடு
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நகர பஸ்கள் நிறுத்தம் அருகே கழிவு நீர், சாக்கடை தேங்கி நிற்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, அப்பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஸ் பயணிகள், திருச்சி.
கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு
திருச்சி மாநகராட்சி எடமலைப்பட்டிபுதூர் 40வது வார்டு நேரு முதல் தெருவில் கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருச்சி.
உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா?
கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா பண்ணப்பட்டி கிராமம் கடவூர் வடக்கு ஒன்றியம் பழனிச்செட்டியூரில் இருந்து உடையாபட்டி செல்லும் சாலையில் தரைமட்ட பாலம் உள்ளது. அது மழை காலங்களில் ஆற்றில் தண்ணீர் வந்தால் போக்குவரத்து மற்றும் மக்கள் யாரும் செல்ல முடியாத சூழ்நிலை இருப்பதால் உயர் மட்ட பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனிச்செட்டியூர், கரூர்.
வீடுகளின் மேல் செல்லும் மின் கம்பிகள்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் கீழப்பெரம்பலூர் கிராமம் காலனி தெருவில் உள்ள வீடுகளின் மேல் பகுதியில் மின்சார கம்பிகள் செல்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொளஞ்சி, கீழப்பெரம்பலூர், பெரம்பலூர்.
கோவிலுக்கு செல்ல சாலை வசதி வேண்டும்
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீபழமலையான்சுவாமி கோவிலுக்கு செல்ல சரியான சாலை வசதி இல்லை. இதனால் சுமார் 3 கிலோ மீட்டர் உள்ள இக்கோவிலுக்கு சிரமப்பட்டு சென்று வரவேண்டி உள்ளது. இதுகுறித் துசம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்ணாமலை, லாடபுரம், பெரம்பலூர்.
சாலையை விரிவு படுத்த வேண்டும்
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், இனுங்கூரில் இருந்து நச்சலூர் செல்லும் சாலையில் அதிக அளவில் போக்குவரத்து நடைபெறுவதால் இந்த சாலையை விரிவு படுத்த வேண்டும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முகமதுபாரக், இனுங்கூர், கரூர்.
சேறும் சகதியுமான மண் சாலை
திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா ஆர்.வளவனூர் கிராமம் 1-வது வார்டு தெரு மண் சாலை என்பதால் மழை பெய்யும்போது சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை அமைக்க வேண்டும்.
பிரபாகரன், ஆர்.வளவனூர்,திருச்சி.
இதேபோல் முசிறி வட்டம் கரட்டம்பட்டி 4வது வார்டு பகுதியில் மண் சாலை மழையின் போது சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலகிருஷ்ணன், திருச்சி.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
திருச்சி 18 வது வார்டு வளையல்காரத்தெருவில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருச்சி.
தெரு நாய்களால் கீழே விழும் வாகன ஓட்டிகள்
திருச்சி மாவட்டம் காட்டூர் கைலாஷ் நகர் காந்தி சாலை 4வது தெருவில் தெரு நாய்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மிகவும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் இந்த நாய்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்துவதினால் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துரையப்பா, கைலாஷ் நகர், திருச்சி.
ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள் அகற்றப்படுமா?
திருச்சி மாவட்டம், கருமண்டபம் கோரைஆற்றின் கரையில் கோழி, ஆட்டு இறைச்சி கழிவுகள் மற்றும் கெட்டுப்போன உணவு கழிவுகளை கொட்டுவதினால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கருமண்டபம், திருச்சி.
இடுகாட்டு மேடை பராமரிக்கப்படுமா?
திருச்சி மாவட்டம், உறையூர் பகுதியில் அமைந்துள்ள இடுகாட்டு மேடை போதுமான பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. மேலும் அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இதன் அருகே கொட்டப்படுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இடுகாட்டு மேடையை பராமரிக்க வேண்டும்.
பொதுமக்கள், உறையூர், திருச்சி.
Related Tags :
Next Story