கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயர் சாவு
நாங்குநேரி அருகே கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயர் இறந்தார்.
நாங்குநேரி:
நாங்குநேரி அருகே உள்ள புதுகுறிச்சியை சேர்ந்தவர் சுடலைமுத்து மகன் சுடலை என்ற மாயாண்டி (வயது 28). என்ஜினீயர் பட்டதாரியான இவர், தந்தைக்கு உதவியாக விவசாய பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் அதே பகுதியில் இவரது குடும்பத்தினர் புது வீடு ஒன்று கட்டி வருகிறார்கள். நேற்று முன்தினம் அந்த கட்டிட பணிகளை மாயாண்டி மேற்பார்வையிட்டு வரும்போது கட்டிடத்தின் மேலிருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story