காற்றாலை சரிந்து விழுந்து தீப்பிடித்ததால் பரபரப்பு


காற்றாலை சரிந்து விழுந்து தீப்பிடித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 29 Sept 2021 1:20 AM IST (Updated: 29 Sept 2021 1:20 AM IST)
t-max-icont-min-icon

வடக்கன்குளம் அருகே காற்றாலை சரிந்து விழுந்து தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வடக்கன்குளம்:
வடக்கன்குளம் அருகே பலத்த சூறைக்காற்றுக்கு காற்றாலை சரிந்து விழுந்து தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பலத்த சூறைக்காற்று

நெல்லை மாவட்டம் பழவூர், வடக்கன்குளம், காவல்கிணறு சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான ஏராளமான காற்றாலைகள் உள்ளன. இந்த காற்றாலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.  
இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியது. நேற்று காலையிலும் சூறைக்காற்றின் வேகம் மேலும் அதிகமாக இருந்தது. 

காற்றாலை சரிந்தது 

இந்த பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், வடக்கன்குளம் அருகே ஆவரைகுளத்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான காற்றாலை ஒன்று திடீரென்று சரிந்து கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் காற்றாலையில் தீப்பிடித்து, மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. 
இதுகுறித்து வள்ளியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

போலீசார் விசாரணை 

சரிந்து விழுந்த காற்றாலை 600 கிலோ வாட் மின்உற்பத்தி திறன் கொண்டது ஆகும். அதன் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக பழவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
பலத்த சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் காற்றாலை சரிந்து விழுந்து தீ்ப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story