திருவாரூரில் காணாமல் போன கல்லூரி பஸ் திருச்சியில் மீட்பு


திருவாரூரில் காணாமல் போன கல்லூரி பஸ் திருச்சியில் மீட்பு
x
தினத்தந்தி 29 Sept 2021 1:35 AM IST (Updated: 29 Sept 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் காணாமல் போனகல்லூரி பஸ் திருச்சியில் மீட்பு

ஜீயபுரம்,செப்.29-
நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பா கோவில் பகுதியில்  சர் ஐசக் நியூட்டன் காலேஜ் ஆப் என்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜி என்ற கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிக்கு சொந்தமான கல்லூரி பஸ் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நேற்று காலையில் அந்த பஸ்சை டிரைவர் எடுக்க வந்தபோது, அங்கு அதனை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கல்லூரி நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன பஸ்சை தேடி வந்தனர். இந்த நிலையில் காணாமல் போன கல்லூரி பஸ் திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை சுங்க சாவடி அருகே நின்றதை பார்த்த ஜீயபுரம் ரோந்து போலீசார் நன்னிலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில்  சம்பவ இடத்திற்கு வந்த நன்னிலம் போலீசார் கல்லூரி பஸ்சை மீட்டு சென்றனர்.

Next Story