இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரிக்கை
இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கவேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட ஆதி தமிழர் முன்னேற்ற கழக துணைச்செயலாளர் மாரிச்செல்வம் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா பூவாணி கிராமத்தில் அருந்ததியர் சமுதாய மக்களுக்கு 1989-ம் ஆண்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய பிறகு 34 ஆண்டுகாலமாக அரசிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாதநிலையில் 15 அருந்ததியர் சமுதாயக் குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என கோரியுள்ளார். இதேபோன்று ராஜபாளையம் அனந்த நாயக்கன் பட்டி கிராமத்தை சேர்ந்த பொன்மாரி என்பவர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், அனந்த நாயக்கன்பட்டி கிழக்குத் தெருவில் 40 அருந்ததியர் சமுதாய குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரியுள்ளார்.
Related Tags :
Next Story