குடும்ப பிரச்சினையில் பெண் தீக்குளிப்பு


குடும்ப பிரச்சினையில் பெண் தீக்குளிப்பு
x
தினத்தந்தி 29 Sept 2021 1:38 AM IST (Updated: 29 Sept 2021 1:38 AM IST)
t-max-icont-min-icon

குடும்ப பிரச்சினையில் பெண் தீக்குளித்தார்.

குன்னம்:

மருத்துவமனையில் சிகிச்சை
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வரகுபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி பிரியங்கா(வயது 25). கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பிரியங்கா நேற்று முன்தினம் வீட்டில் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அப்போது அவரது 6 மாத பெண் குழந்தை திரிஷாவுக்கு முதுகில் தீக்காயம் ஏற்பட்டது.
அவர்களை, அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரும் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணை
இச்சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரியங்காவிற்கு திருமணமாகி 5 வருடங்களே ஆகிறது. மேலும் பிரியங்கா, நீதிபதியிடம் வாக்குமூலம் கொடுத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story