மணல் லாரி பறிமுதல்; உரிமையாளர் கைது


மணல் லாரி பறிமுதல்; உரிமையாளர் கைது
x

மணல் லாரி பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆணைவாரி ஓடையில் மினி லாரியில் சிலர் மணல் அள்ளிக்கொண்டு வந்து மணப்பத்தூர் கடைவீதியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே குவாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் வந்தனர். இதனை கண்ட அவர்கள், லாரியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் ஒருவரை விரட்டிச்சென்று ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் நாகல்குழி கிராமத்தைச் சேர்ந்த சரவணன்(வயது 41) என்பதும், லாரியின் உரிமையாளர் என்பதும் தெரியவந்தது. இது குறித்து குவாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். மேலும் மணல் ஏற்றி வந்த லாரியையும் பறிமுதல் செய்தனர்.

Next Story