ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது


ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 Sept 2021 1:44 AM IST (Updated: 29 Sept 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருகே ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 பேைர போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர், 
சிவகாசி மீனம்பட்டியை சேர்ந்தவர் அஜித்குமார், இவருக்கும் இவரது உறவினர் சாத்தூர் நென்மேனியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் ரூ.8 லட்சம் மதிப்புள்ள பூர்வீக சொத்தை அனுபவிப்பதில் பிரச்சினை இருந்தது. இந்நிலையில் அஜித் குமார், மதுரையை சேர்ந்த போக்சோ குற்றவாளி அஜித்குமார் என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் ஆயுதங்களுடன் நென்மேனி பள்ளிவாசல் தெருவில் சுற்றிக்கொண்டிருந்தார். இதுபற்றி தகவல் அறிந்த இருக்கன்குடி சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் முதல் நிலை காவலர் சதீஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மோட்டார் சைக்கிளில் சுற்றிக்கொண்டிருந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்து அவர்களிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடத்தியதில் அவர்கள் சுரேசை கொலை செய்ய வந்ததாக தெரிவித்தனர். அதன்பேரில் இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேைரயும் கைது செய்து காவலுக்கு அனுப்பி வைத்தனர்.துரித நடவடிக்கை எடுத்து கொலைச்சம்பவத்தை தவிர்த்த இருக்கன்குடி சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீஸ்காரர் சதீஷ் ஆகிய இருவரையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பரிசு வழங்கி பாராட்டினார். 

Next Story