தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 29 Sept 2021 2:27 AM IST (Updated: 29 Sept 2021 2:27 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

எரியாத உயர் கோபுர மின் விளக்கு 
மேக்கா மண்டபம் சந்திப்பில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த விளக்கு அமைத்த போது, அந்த வழியாக வாகனங்கள் சென்று வர சுலபமாக இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக உயர் கோபுர மின் விளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதியை வாகனங்கள் கடந்து செல்ல மிகவும் சிரமப்பட வேண்டியது உள்ளது. எனவே உயர் கோபுர மின் விளக்குகள் எரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                             -ரோகித், மேக்கா மண்டபம்.

சாலையை சீரமைக்க வேண்டும்
ஆற்றூர் வேர்கிளம்பி சாலையோரம் குடிநீர் திட்ட குழாய்கள் அமைக்க குழிகள் தோண்டப்பட்டன. அதற்கா பணிகள் முடிந்த பிறகும் அந்த குழிகளை சரிவர மூடாமல் சென்று விட்டனர். இதனால் அந்த சாலை வழியாக வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                             -ஆர்.சுப்பிரமணியன், ஏற்றக்கோடு.

மின்கம்பம் மாற்றப்படுமா? 
தென்தாமரைகுளத்தில் சாமி தோப்புக்கு செல்லும் முக்கிய சாலையில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி உடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது. தற்போது மழையும், சூறை காற்றுமாக உள்ளது. அந்த மின் கம்பம் எந்த நேரத்திலும் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே விபத்து நடப்பதற்கு முன் அந்த மின்கம்பத்தை அகற்றி புதிதாக மின் கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                              -செல்வ குமார், தென்தாமரைகுளம். 

சூரியசக்தி மின்விளக்கு
குமரி மாவட்டத்தில் பல கிராமங்களில் பாலங்கள் உள்ளன. அந்த பாலங்களில் இரவு நேரத்தில் பெரும் பாலான பகுதிகளில் மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால் பாலம் இருளடைந்து காணப்படுகிறது. அதில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் சென்று வருகிறார்கள். அவற்றை சீரமைக்க வேண்டும். அல்லது அனைத்து பாலங்களிலும் சூரியசக்தி மின் விளக்குகள் அமைத்தால், வாகன ஓட்டிகளுக்கு வசதியாக இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
                                            -அனந்தநாராயணன், மருங்கூர்.

குளத்தை தூர்வார வேண்டும்
தலக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளம் உள்ளது. இந்த குளம் பராமரிக்கப்படாததால், செடி, கொடிகள் வளர்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே இந்த குளத்தை தூர்வாரி, குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                             -வி.எஸ்.மூர்த்தி, தலக்குளம்.
நாய்கள் தொல்லை
நாகர்கோவிலில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் ராமவர்மபுரம் பழைய ஸ்டேட் பாங்க் காலனியில் தெருநாய்கள் ஏராளமாக சுற்றி வருகின்றன. அவை சாலையின் குறுக்கே ஓடுவதால் வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                -ஜெயராம், ராமவர்மபுரம்.

தெரு விளக்கு அமைக்க வேண்டும்
நாகர்கோவில் மேல புத்தேரி, பாரத்நகர் வடக்கு அணுகு சாலை முதல் தெருவில், தெருவிளக்கு இல்லை. அந்த பகுதியில் புதர்கள் மண்டி கிடக்கிறது. இதனால் அவற்றில் இருந்து அடிக்கடி பாம்புகள் வெளியே வருகின்றன. இரவு நேரத்தில் விளக்கு இல்லாதால், சாலையில் பாம்புகள் செல்வது தெரிவலில்லை. எனவே தெருவிளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                         -சுப்பிரமணியம், பாரத் நகர், புத்தேரி.

Next Story