சாலை மறியலுக்கு முயற்சி


சாலை மறியலுக்கு முயற்சி
x
தினத்தந்தி 29 Sept 2021 4:12 PM IST (Updated: 29 Sept 2021 4:12 PM IST)
t-max-icont-min-icon

குடிநீர்கேட்டு 4 ஊராட்சி தலைவர்கள் சாலைமறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அவினாசி
குடிநீர்கேட்டு 4 ஊராட்சி தலைவர்கள் சாலைமறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊராட்சி தலைவர்கள்
அவினாசி ஒன்றியம் பழங்கரை, குப்பாண்டம் பாளையம், சின்னேரிபாளையம், பொங்குபாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் கடந்த 25 நாட்களாக குடிநீர் இன்றி பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
 குடிநீர் வினியோகம்  செய்ய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து நடந்த ஊராட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் சாலைமறியல் செய்வதென முடிவு செய்யப்பட்டது. 
சாலை மறியல் செய்ய முயற்சி
அதன்படி நேற்று 4 ஊராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் ஒன்றுதிரண்டு அவினாசி-திருப்பூர் ரோட்டில் சாலைமறியல் செய்ய முயன்றனர்.
 இது பற்றி தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஊராட்சி தலைவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். 
முடிவில் 2 நாட்களுக்குள் ஊராட்சிகளுக்கு முறைப்படி குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிய பின் அனைவரும் கலைந்து சென்றனர். ஊராட்சி தலைவர்கள் சாலை மறியல் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



Next Story