குண்டும், குழியுமான தார்சாலை
குண்டும், குழியுமான தார்சாலை
குடிமங்கலம்
குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது சோமவாரப்பட்டி ஊராட்சி. சோமவாரப்பட்டி ஊராட்சியில் சோமவாரப்பட்டி, எஸ்.அம்மாபட்டி, பெதப்பம்பட்டி, ஆர்.ஜி.ரத்னம்மாள் நகர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. பெதப்பம்பட்டியிலிருந்து பொட்டையம்பாளையம் வழியாக உடுமலை செல்லும் கிராம இணைப்புசாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த தார்சாலை வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். பெதப்பம்பட்டியை சுற்றிலும் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளதால் விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளைந்த பொருட்களை இசசாலை வழியாக கொண்டு செல்கின்றனர். இந்த நிலையில் கிராமங்களை இணைக்கும் தார்சாலை பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே கிராம இணைப்புசாலையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story