ஆறுமுகநேரியில் அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் தின்று பெண் தற்கொலை


ஆறுமுகநேரியில்  அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் தின்று பெண் தற்கொலை
x
தினத்தந்தி 29 Sept 2021 6:24 PM IST (Updated: 29 Sept 2021 6:24 PM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரியில், அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரியில், அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மளிகை கடைக்காரர்
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காமராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்தனகுமார். இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 44). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகளுக்கும், மகனுக்கும் திருமணம் ஆகிவிட்டது.
கணவனும், மனைவியும் தனது மகன் காளிராஜாவுடன் வசித்து வருகின்றனர். சந்தனகுமார் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். மற்றொரு இடத்தில் அவரது மகன் காளிராஜா கடை நடத்தி வருகிறார்.
தற்கொலை
இந்தநிலையில் தனலட்சுமிக்கு காக்கா வலிப்பு நோய் இருந்துள்ளது. இதற்காக கடந்த 6 மாதங்களாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மாத்திரைகள் வாங்கி தின்று வந்துள்ளார்.
கடந்த 25-ந் தேதி காலையில் தனக்கு உடல்நிலை மிகவும் சரி இல்லை, மாடியில் சென்று ஓய்வு எடுக்கிறேன், யாரும் எழுப்ப வேண்டாம், நானே வந்து சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டு சென்றார். அதன்பின்னர் மாலை 4 மணி வரை வராததால் மகன் காளிராஜ் மாடியில் சென்று பார்த்தார். அப்போது வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கி கிடந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.
விசாரணை
இதுதொடர்பாக மகன் காளிராஜா கொடுத்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வழக்குப்பதிவு  செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், அவர் காக்கா வலிப்பு நோய்க்காக வைத்திருந்த 15 மாத்திரைகளை ஒரேநேரத்தில் அளவுக்கு அதிகமாக தின்று விட்டதாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
---------------

Next Story