தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் தடுப்பூசி முகாம் கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு நாளை மறுநாள் (சனிக்கிழமை) பஞ்சாயத்துகளில் கிராமசபை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டங்களில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அனைவரும் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும் கிராம சபை கூட்டம் நடைபெறும் இடங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுகாதாரத்துறையின் மூலம் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத, தகுதி உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story